
Sania Mirza Suffers First-round Exit From Abu Dhabi Open (Image Source: Google)
அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மெட்டக் சாண்டஸ் ஜோடி, பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிலிப்கன்ஸ், ஜெர்மனியின் லாரா செக்மண்ட் ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டில் 3-6 என்ற கணக்கில் சானியா ஜோடி இழந்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டிற்கான ஆட்டத்திலும் அபாரமாக விளையாடிய கிர்ஸ்டான் - லாரா ஜோடி கைப்பற்றி சானியா ஜோடிக்கு அதிர்ச்சியளித்தது.
இதன்மூலம் சானியா மிர்சா ஜோடி 3-6,4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.