Advertisement

மத்திய அரசு விருதுகள்: பிரக்ஞானந்தா, இளவெனில் வாலறிவானுக்கு அர்ஜூனா விருது!

தமிழகத்தை சேர்ந்த  இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவான்  ஆகியோர் உட்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 14, 2022 • 22:09 PM
Sharath Kamal gets Khel Ratna Award; Sable, Nikhat, Eldouse Paul, Pragg among 25 named for Arjuna Aw
Sharath Kamal gets Khel Ratna Award; Sable, Nikhat, Eldouse Paul, Pragg among 25 named for Arjuna Aw (Image Source: Google)

தமிழகத்தை சேர்ந்த  இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவான்  ஆகியோர் உட்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையில் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தியான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுவருகிறது.

இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தை சேர்ந்த  இளம் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவான்  ஆகியோர் உட்பட 25 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், துரோணாச்சார்யா விருது ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமர் (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்), சுஜீத் மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது தரம்வீர் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட உள்ளது. 

அர்ஜுனா விருதுகள்: சீமா புனியா ( தடகளம்), எல்தோஸ் பால் (தடகளம்), அவினாஷ் முகுந்த் சேபிள் (தடகளம்), லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்), பிரணாய் (பேட்மிண்டன்), அமித் (குத்துச்சண்டை), நிகத் ஜரீன் (குத்துச்சண்டை), பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்), ஆர் பிரக்ஞானந்தா (செஸ்), டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுஷிலா தேவி (ஜூடோ), சாக்ஷி குமாரி (கபடி), நயன் மோனி சைகியா, சாகர் கைலாஸ் ஓவல்கர் (மல்லகாம்ப்), இளவேனில், ஓம்பிரகாஷ் மிதர்வா, ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்), அன்ஷு (மல்யுத்தம்), சரிதா (மல்யுத்தம்), பர்வீன், மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி, தருண் தில்லான், ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement