
Taylor Fritz stuns Rafael Nadal, Casper Ruud beats Auger-Aliassime at ATP Finals (Image Source: Google)
உலக தரவரிசையில் 'டாப்-8' இடம் வகிக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏடிபி இறுதி சுற்று எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் இளம் வீரரும், தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருக்கும் டெய்லர் ப்ரிட்சை சந்தித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இரு வீரர்கலும் சரிக்குசரியாக மோதினார். கடும் போராட்டத்திற்கு பிறகு டெய்லர் 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சிக் கொடுத்தார்.