
Wales draw with US after 64-year World Cup hiatus (Image Source: Google)
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியின் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெரிக்க அணிக்கும் ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் திமுதி வியா கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் வேல்ஸ் அணி மேற்கொண்ட அனைத்து கோல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.
இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் அமெரிக்கா அணி 1-0 என முன்னிலை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்திலும் இரு அணிகளும் கோலடிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.