indian women cricket team
வாழ்வில் அடுத்து என்ன பயணத்தை நோக்கி ராமன்!
கடந்த 2018 டிசம்பரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தேர்வானார். அவர் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் இந்திய மகளிர் அணி, 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. எனினும் கடந்த மார்ச்சில் இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்தது.
2018 ஜூலை முதல் நவம்பர் வரை இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் பணியாற்றினார். 2018 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. எனினும் அப் போட்டியின்போது பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை.
Related Cricket News on indian women cricket team
-
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் தேர்வு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47