Advertisement
Advertisement
Advertisement

indw vs banw

மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ரேனுகா அபாரம்; வங்கதேசத்தை பந்தாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்
Image Source: Google
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ரேனுகா அபாரம்; வங்கதேசத்தை பந்தாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

By Bharathi Kannan July 26, 2024 • 16:28 PM View: 146

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  அதன்படி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்படி வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் திலாரா அக்தர் 6 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய இஷ்மா தஞ்சிம் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை முர்ஷிதா கதுமும் 4 ரன்களுடன் நடைடைக் கட்டினார். இதனால் வங்கதேச மகளிர் அணி 21 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

Related Cricket News on indw vs banw