
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடர் சீனாவில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் தற்போது முதலாவதாக இந்திய மகளிர் அணியினர் விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஐசிசி தரவரிசையில் டாப் இடத்தில் இருப்பதால் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது.
அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது மழை வந்த காரணத்தால் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவித்ததை தொடர்ந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைக் தொடர்ந்து செப்டம்பர் 24ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா அண்டை நாடான வங்கதேசத்தை எதிர்கொண்டது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த முதல் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 17.5 ஓவரில் வெறும் 51 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக சஹாதி ராணி 0, சுல்தானா 0, சோர்ணா அக்தர் 0, பாஹிமா காட்டுன் 0, மறுபா அக்தர் 0 என ஐந்து வீராங்கனைகள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.