paul van meekeren
CWCL 2: எட்வர்ட்ஸ், வான் மீகெரன் அசத்தல்; கனடாவை பந்தாடியது நெதர்லாந்து!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களுக்கும், விக்ரம்ஜித் சிங் 25 ரன்களுக்கும், முசா அஹ்மத் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன திரும்பினர்.
பின்னர் இணைந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் - நோஹா கிராஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த நோஹா கிராஸ் 31 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஷரிஸ் அஹ்மத் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஸ்காட் எட்வர்ட்ஸும் 72 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on paul van meekeren
-
CWCL 2: அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல் வெற்றி!
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWCL 2: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; கனடாவை வீழ்த்தியது நெதர்லாந்து!
கனடா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: ஷாகிப் அல் ஹசன் அரைசதம்; நெதர்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்!
ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தனியாக நாங்கள் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுதான் போட்டியின் போதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது என ஆட்டநாயகன் விருதை வென்ற பால் வான் மீகெரன் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இத்தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவோம் என பேசினோம். இப்போதும் அதுவே எங்களுடைய இலக்காக இருக்கிறது என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்திடம் சரணடைந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
2020-ல் உணவு டெலிவரி; 2023 இல் வரலாற்று வெற்றியளர் - வான் மீகெரனுக்கு குவியும் பாராட்டு!
நெதர்லாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் பால் வான் மீகெரனின் பழைய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சூர்யகுமார் யாதவிற்கு பந்துவீச கஷ்டப்பட்டோம் - பால் வான் மீகெரென்
ரோஹித் சர்மா, விராட் கோலியை விட சூர்யகுமார் யாதவிற்கு பந்துவீசியது தான் கடினமாக இருந்ததாக நெதர்லாந்து அணியின் பால் வான் மீகெரென் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24