psl 2024 final
உடை மாற்றும் அறையில் புகைப்பிடித்த இமாத் வசிம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து, ஷதாக் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணி இமாத் வசிம் மற்று ஷதாப் கான் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கான் 57 ரன்களைச் சேர்த்தார். இஸ்லாமாபாத் அணி தரப்பில் இமாத் வசிம் 5 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Related Cricket News on psl 2024 final
-
பிஎஸ்எல் 2024: கடைசி பந்து வரை சென்ற போட்டி; முல்தானை வீழ்த்தி சாம்பியனான இஸ்லாமாபாத்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
பிஎஸ்எல் 2024 இறுதிப்போட்டி: முல்தன் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47