
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இரண்டாவது எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதையடுத்து நாளை நடைபெறும், பிஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து, ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிஎஸ்எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட்
- இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
- நேரம் - இரவு 9.30 மணி