r kavin
டிஎன்பிஎல் 2025: அதிரடியில் மிரட்டிய ராஜகோபால்; வெற்றியை ருசித்த சேலம் ஸ்பார்டன்ஸ்!
நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மதிரை பாந்தர்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ராம் அரவிந்த் மற்றும் பாலச்சந்தர் அனிருத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனிருத் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராம் அரவிந்தும் 37 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய சரவணனும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சதூர்வேத் மற்றும் ஆதீக் உர் ரஹ்மான் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அவ்வபோது பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினர்.
Related Cricket News on r kavin
-
TNPL 2024: விவேக் அரைசதத்தில் டிராகன்ஸை வீழ்த்தி ஸ்பார்டன்ஸ் அபார வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
TNPL 2024: கவின்; வைத்யா அரைசதம்; மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47