Ab de villiers
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் டி வில்லியர்ஸ் - ஆகாஷ் சோப்ரா கருத்து!
ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் கூடுதலாக ஆடுவதாக இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும், ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான டிவில்லியர்ஸ் ஐபிஎல்லிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட வல்லவர் என்பதால் மிஸ்டர் 360 என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டிவில்லியர்ஸ், 2019 உலக கோப்பைக்கு தென் ஆப்பிரிக்கா தீவிரமாக தயாராகிவந்த நிலையில், அதற்கு முன்பாக திடீரென ஓய்வு அறிவித்தார்.
Related Cricket News on Ab de villiers
-
நான் பந்துவீச கடினமான வீரர் இவர் மட்டும் தான் - வஹாப் ரியாஸ்!
தான் பந்துவீசியதிலேயே மிகவும் கடினமான வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மட்டும் தான் என பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்ற ‘மிஸ்டர் 360’ - கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளதை அடுத்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றன. ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து டி வில்லியர்ஸுக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஏபிடி ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் இன்று அறிவித்துள்ளார். ...
-
பும்ராவை எதிர்கொள்ள இவரால் மட்டுமே முடியும் - கவுதம் காம்பீர் ஓபன் டாக்!
ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சிறந்த வீரரை ஏபி டிவில்லியர்ஸ் ஆல் மட்டுமே சமாளிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
சதம் விளாசிய மிஸ்டர் 360; உச்சகட்ட ஃபார்மில் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பயிற்சி ஆட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா ஆர்சிபி?
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப் படுவதை நிறுத்துங்கள் - டி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து தொடரில் இந்திய ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப்படுவதை நிறுத்துங்கள் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: துபாய் வந்தடைந்த ‘மிஸ்டர் 360’!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கலந்துகொள்வதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இன்று துபாய் வந்தடைந்தார். ...
-
உலகில் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விரும்பும் வீரர்களின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது - ரசிகர்களின் நெஞ்சை அள்ளிய ரஷீத்!
தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை போதாது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
சிங்கராக மாறிய மிஸ்டர் 360, கமெண்ட் செய்த மேக்ஸ்வெல்!
டி வில்லியர்ஸ் தனது தந்தையின் 70வது பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை பாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...
-
‘எனது ஓய்வு முடிவே இறுதியானது’ என்று கூறிய டி வில்லியர்ஸ்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
தனது ஓய்வு முடிவே இறுதியானது எனக்கூறி டி வில்லியர்ஸ் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; கனவான ஏபிடி கம்பேக் - ரசிகர்கள் அதிர்ச்சி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் தென்ஆப்பிரிக்க அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47