
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை வழங்கிய வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் எனும் விருதை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது கவுரவித்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஐசிசி மூன்று வீரர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் எனும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட்டின் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் மற்றும் இந்திய மகளிரணியின் முன்னாள் வீராங்கனை நீத்து டேவிட் ஆகிய மூவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளதாக இசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான அலெஸ்டர் குக், அந்த அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமாக டெஸ்டில் 161 போட்டிகளில் விளையாடி 12,472 ரன்களையு, 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3204 ரன்களையும் குவ்யித்துள்ளார். இதில் அவர் 38 சதங்கள் மற்றும் 76 அரைசதங்களையும் விளாசியுள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.