Akeem jordan
ENG vs WI, 3rd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; அறிமக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்ஹாமில் நடைபெற உள்ளது.
இதில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மையா லூயிசுக்கு பதிலாக அறிமுக வீரர் அகீம் ஜோர்டன் அணியில் இடம்பிடித்துள்ளார்.
Related Cricket News on Akeem jordan
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47