Advertisement
Advertisement

ENG vs WI, 3rd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; அறிமக வீரருக்கு வாய்ப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் ஜோர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan July 25, 2024 • 14:58 PM
ENG vs WI, 3rd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; அறிமக வீரருக்கு வாய்ப்பு!
ENG vs WI, 3rd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; அறிமக வீரருக்கு வாய்ப்பு! (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்ஹாமில் நடைபெற உள்ளது.

இதில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மையா லூயிசுக்கு பதிலாக அறிமுக வீரர் அகீம் ஜோர்டன் அணியில் இடம்பிடித்துள்ளார்.

Trending


அவரைத்தவிர்த்து இத்தொடரில் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவரும் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர். தற்சமயம் அணியில் வாய்ப்பை பெற்றுள்ள அகீம் ஜோர்டன் கடந்த 2022ஆம் ஆண்டும் முதல் விளையாடிய 19 முதல் தர போட்டிகளில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன்மூலம் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு துறையானது வலிமையடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், மைக்கைல் லூயிஸ், சச்சரி மெக்கஸ்கி, கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement