Asia cup 2023 final
விருதுக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு தருகிறேன் - முகமது சிராஜ்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்புவிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் ஒட்டுமொத்த கணிப்புகளையும் தவிடு பொடியாக்கும் விதமாக இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டார்கள்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இலங்கை அணியின் சரிவை முதலில் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆரம்பித்து வைத்தார். இதற்கு அடுத்து இலங்கையின் சரிவை யாராலும் தடுக்க முடியவில்லை. பும்ராவுடன் முகமது சிராஜ் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் இலங்கை அணியின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் அதே இடத்தில் முடிவுரை எழுதிவிட்டார்.
Related Cricket News on Asia cup 2023 final
-
இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
நல்ல வேலையாக இந்த போட்டியில் நாங்கள் டாசை இழந்தோம். ஏனெனில் இன்றைய போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருந்தோம் என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47