
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்புவிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் ஒட்டுமொத்த கணிப்புகளையும் தவிடு பொடியாக்கும் விதமாக இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டார்கள்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இலங்கை அணியின் சரிவை முதலில் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆரம்பித்து வைத்தார். இதற்கு அடுத்து இலங்கையின் சரிவை யாராலும் தடுக்க முடியவில்லை. பும்ராவுடன் முகமது சிராஜ் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் இலங்கை அணியின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் அதே இடத்தில் முடிவுரை எழுதிவிட்டார்.
மேற்கொண்டு மீண்டும் அந்த அவர் பவர் பிளேவுக்குள் ஒருவிக்கட்டும், பவர் பிளே முடிந்து ஒருவிக்கட்டும் கைப்பற்றினார். இவர்களுக்கு அடுத்து பந்து வீச வந்த மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா தன் பங்குக்கு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதியாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் முகமது சிராஜ் ஏழு ஓவர்களுக்கு 21 ரன்கள் தந்து ஒரு மெய்டன் செய்து ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அவருடைய மிகச்சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது.