At pune
இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்று. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
Related Cricket News on At pune
-
தோனி எனது சகோதரரைப் போல - திசாரா பெரேரா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தமக்கு சகோதரர் போன்றவர் என இலங்கையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47