
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்று. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டி நடைபெறவுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் பார்ப்போம். புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இதுவரை இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியைப் பதிவுய்செய்து அசத்தியுள்ளன. மேற்கொண்டு இந்த மாஇதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 430 ரன்களாக உள்ளது.