Aus vs ind melbourne test
பாக்ஸிங் டே டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்; பேட்டிங்கில் மீண்டும் சொதப்பும் இந்தியா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 26) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அறிமுக தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அரைசதம் கடந்ததுடன் 60 ரன்களைச் சேர்க்க மற்றொரு தொடக்க வீர்ரான உஸ்மான் கவாஜா 57 ரன்களையும் சேர்த்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் அரைசதம் கடந்த் கையோடு 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Aus vs ind melbourne test
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24