Ayush badoni
ஐபிஎல் 2024: ஆயூஷ் பதோனி அதிரடியால் தப்பிய லக்னோ; டெல்லி அணிக்கு 168 டார்கெட்!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 17ஆவது சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற குயின்டன் டி காக் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 3 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததைப் போன்று இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
Related Cricket News on Ayush badoni
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே - லக்னோ ஆட்டம் மழையால் ரத்து!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. ...
-
ஐபிஎல் 2023: பதோனி அரைசதம்; மழையால் ஆட்டம் தடை!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன் - ஆயூஷ் பதோனி
எங்கள் அணி நிர்வாகம் மோசமான பந்தை அடித்து ஆட சொன்னார்கள். அதற்கு கிடைத்த வெற்றி ஆக தான் இதனை கருதுகிறேன் என லக்னோ அணி வீரர் ஆயூஷ் பதோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆயூஷ் பதோனியை புகழ்ந்த கேஎல் ராகுல்!
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்த ஆயூஷ் பதோனியை, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணிக்கு பேட்டால் பதிலடி கொடுத்த ஆயூஷ் பதோனி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆயூஷ் பதோனி அதிரடியாக விளையாடிய விதத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: பிராவோவின் ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை - ஆயூஷ் பதோனி!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரர் பதோனி 9 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். ...
-
ஐபிஎல் 2022: இளம் வீரரை வெகுவாக பாராட்டிய கேஎல் ராகுல்!
வெறித்தனமான பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் வெளிச்சத்தையும் வெறும் இரண்டே போட்டிகளில் பெற்றுள்ள ரவி பதோனியை, லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எங்கள் அணியின் குட்டி ஏபிடி அவர் தான் - கேஎல் ராகுல் புகழாரம்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரரான பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். ...
-
ஐபிஎல் 2022: அஸ்திவாரத்தை தகர்த்த ஷமி; அணியை மீட்ட ஹூடா, பதோனி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47