Brisbane heat vs hobart hurricanes: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: பரப்பான ஆட்டத்தில் பிரிஸ்பேனை வீழ்த்தி ஹோபர்ட் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணியில் தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 23 ரன்களை எடுத்த நிலையில் உஸ்மான் கவாஜாவும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே - மேத்யூ ரென்ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மார்னஸ் லபுஷாக்னே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் 40 ரன்களை எடுத்த நிலையில் மேத்யூ ரென்ஷா 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேக்ஸ் பிரைண்ட் 4 ரன்னிலும், அதிரடியாக விளையாடி வந்த அல்ஸப் 39 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் இறுதிவரை களத்தில் இருந்த மார்னஸ் லபுஷாக்னே 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 77 ரன்களில் ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Brisbane heat vs hobart hurricanes - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47