
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணியில் தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 23 ரன்களை எடுத்த நிலையில் உஸ்மான் கவாஜாவும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே - மேத்யூ ரென்ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மார்னஸ் லபுஷாக்னே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் 40 ரன்களை எடுத்த நிலையில் மேத்யூ ரென்ஷா 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேக்ஸ் பிரைண்ட் 4 ரன்னிலும், அதிரடியாக விளையாடி வந்த அல்ஸப் 39 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் இறுதிவரை களத்தில் இருந்த மார்னஸ் லபுஷாக்னே 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு கலெப் ஜொவெல் - மிட்செல் ஓவன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சார்லி வகிம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜொவெலுடன் இணைந்த நிகில் சௌத்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் கலெப் ஜொவெல் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.