Ds vs gm: Cricket News & Match Updates
LPL 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி கலே மார்வெல்ஸ் அசத்தல் வெற்றி!
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்த டிம் செய்ஃபெர்ட்டும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பனுகா ராஜபக்ஷா ஒரு ரன்னிலும், டிம் செய்ஃபெர்ட் 28 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜனித் லியானகே - ஷஹான் ஆரச்சிகே இருவரும் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இதில் லியானகே 13 ரன்களுக்கும், ஷஹான் 15 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Ds vs gm - Tesst
LPL 2024: இசுரு உதானா போராட்டம் வீண்; மார்வெல்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47