Durban super giants vs pretoria capitals
எஸ்ஏ20 2025: குர்பாஸ், ஜேக்ஸ் அதிரடி வீண்; பிரிட்டோரியாவை 2 ரன்களில் வீழ்த்தி டர்பன் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 லீக் டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு பிரைஸ் பார்சன்ஸ் மற்றும் மேத்யூ பிரீஸ்ட்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரீட்ஸ்கி 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பிரைஸ் பார்சன்ஸும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Durban super giants vs pretoria capitals
-
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன் அரைசதம்; பிரிட்டோரியா அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47