Graham thorpe
இந்த சதத்தை கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் - ஜோ ரூட்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், பென் டக்கெட் 40 ரன்களிலும், ஹாரி புரூக் 33 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியில் நான்காம் வரிசையில் களமிறங்கிய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதேசமயம், அவருடன் இணைந்து விளையாடிய கஸ் அட்கின்சனும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Graham thorpe
-
உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் காலமானார்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான கிரஹாம் தோர்ப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47