
இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான கேப்டனாக வலம் வந்தவர் எம்எஸ் தோனி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அதுவும் எதிர்காலத்தில் எந்தெந்த துறைகள் உச்சத்தில் இருக்கும் என்பதை தெளிவாக கணித்து பணத்தை செலவிட்டு வருகிறார்.
தோனிக்கு எப்போதுமே இயற்கை விவசாயத்தின் மீது ஈர்ப்பு அதிகம். எனவே கருங்கோழி பண்ணை, விவசாயம் ஆகியவையிலும் முதலீடு செய்துள்ளார். சமீபத்தில் விவசாயத்திற்கு உதவக்கூடிய கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனத்திலும் தனது பங்களிப்பை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தோனி எண்டர்டெயின்மண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதுவும் தமிழ்நாட்டின் மீதுள்ள காதலால் தனது முதல் தயாரிப்பை தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதற்கான அறிவிப்பு இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.