Jharkhand cricket association
ரஞ்சி கோப்பை 2024-25: இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட் அணி அறிவிப்பு!
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் இஷான் கிஷன். கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷனை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இவர்கள் இருவரும் புறக்கணிக்கப்பட்டனர்.
Related Cricket News on Jharkhand cricket association
-
புஜ்ஜி பாபு கோப்பை 2024: ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47