
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று சிட்னியில் நடந்த போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணியில் ஒயிட்மேன் தான் அதிகபட்சமாக 42 ரன்கள் அடித்தார். ஒயிட்மேன் 34 பந்தில் 42 ரன்கள் அடித்தார். அலெக்ஸ் ரோஸ் 34 பந்தில் 34 ரன்கள் மட்டுமே அடித்தார். பின்வரிசையில் பென் கட்டிங் 15 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் அடித்தார்.
அபாரமாக பந்துவீசிய சிட்னி சிக்ஸர்ஸ் பந்துவீச்சாளர் சீன் அபாட் 4 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அபாட்டின் சிறப்பான பந்துவீச்சாள் ரன்னே அடிக்கமுடியாமல் திணறிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே அடித்தது.