K easwaran: Cricket News & Match Updates
TNPL 2024: ரவிச்சந்திரன் அஸ்வின் அபார பந்துவீச்சு; திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அசத்தல் வெற்றி!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 8ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து திண்டுக்கல் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய திண்டுகல் அணிக்கு ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விமர் குமாரும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஷிவம் சிங்குடன் இணைந்த பாபா இந்திரஜித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். Read More...
Related Cricket News for K easwaran - Tesst
TNPL 2024: ஷிவம் சிங் அதிரடி; ஈஸ்வரன் அபாரம் - திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47