Advertisement
Advertisement
Advertisement

Leic vs ham

இங்கிலாந்தில் அசத்திவரும் அஜிங்கியா ரஹானே; வைரலாகும் காணொளி!
Image Source: Google
Advertisement

இங்கிலாந்தில் அசத்திவரும் அஜிங்கியா ரஹானே; வைரலாகும் காணொளி!

By Bharathi Kannan August 17, 2024 • 11:46 AM View: 82

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ஹாம்ஷைர் - லீசெஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாம்ஷைர் அணியானது  நிக் கிப்பின்ஸ் மற்றும் லியாம் டௌசன் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக நிக் கிப்பின்ஸ் சதமடித்து அசத்தியதோடு 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்களையும், லியாம் டௌசன் அரைசதம் கடந்த கையோடு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 50 ரன்களையும் சேர்த்தனர். லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் டாம் ஸ்கிரீவன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய லீசெஸ்டர்ஷைர் அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.

Advertisement

Related Cricket News on Leic vs ham