இங்கிலாந்தில் அசத்திவரும் அஜிங்கியா ரஹானே; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிவரும் இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தி வருகிறார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ஹாம்ஷைர் - லீசெஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாம்ஷைர் அணியானது நிக் கிப்பின்ஸ் மற்றும் லியாம் டௌசன் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக நிக் கிப்பின்ஸ் சதமடித்து அசத்தியதோடு 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்களையும், லியாம் டௌசன் அரைசதம் கடந்த கையோடு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 50 ரன்களையும் சேர்த்தனர். லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் டாம் ஸ்கிரீவன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய லீசெஸ்டர்ஷைர் அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
Trending
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோமன் வால்கர், கேப்டன் லூயிஸ் ஹில், சாலமன் புடிங்கர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த அஜிங்கியா ரஹானே, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 74 ரன்களிலும், அஜிங்கியா ரஹானே 70 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் வந்த லியாம் ட்ரெவாஸ்கிஸ் 60 ரன்களையும், பென் காக்ஸ் 45 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் லீசெஸ்டர்ஷைர் அணி 49.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஹாம்ஷைர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் லீசெஸ்டர்ஷைர் அணியானது ஒருநாள் கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
A fourth half-century of the Metro Bank for Ajinkya Rahane.
— Metro Bank One Day Cup (@onedaycup) August 16, 2024
70 crucial runs in Leicestershire's quarter-final against Hampshire.
Check out all five boundaries here including his straight six... pic.twitter.com/gOfY3cEhMU
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்நிலையில் இப்போட்டியில் லீசெஸ்டர்ஷைர் அணியானது 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களமிறங்கிய அஜிங்கியா ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் வெற்றியிலும் மிக முக்கிய பங்கினை வகித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் அவர் 2 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இந்நிலையில் அஜிங்கியா ரஹானே பவுண்டரிகளை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now