Advertisement
Advertisement

Marcus stoinis

எஸ்ஏ20 2024:  ஸ்டோய்னிஸ், நூர் அஹ்மத் பந்துவீச்சில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
Image Source: Google

எஸ்ஏ20 2024: ஸ்டோய்னிஸ், நூர் அஹ்மத் பந்துவீச்சில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!

By Bharathi Kannan January 24, 2024 • 12:38 PM View: 133

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஸோர்ஸி 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Related Cricket News on Marcus stoinis