
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதிலும் 111 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்நிலையில் இப்போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பகிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதன்படி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வங்கதேச அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.
இப்போட்டியைப் பற்றி பேசினால், இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூஸி பேட்ஸ் 28 ரன்களும், புரூக் ஹாலிடே 22 ரன்களையும் சேர்த்தன்ர். பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அநஷ்ரா சந்து 3 விக்கெட்டுக்களையும், சாதியா இக்பால், நிதா தார், ஒமைமா சொஹைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.