Pak vs
PAK vs ZIM: ரிஸ்வான் அதிரடியில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான், பாபர் அசாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 91 ரன்களையும், பாபர் அசாம் 52 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மதவரே, மருமணி ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியெறினர்.
இதனால் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
Related Cricket News on Pak vs
-
PAK vs SA : ஃபகர் ஸ்மான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 4 டி20 போட்ட ...
-
பாபர் அசாம் முதல் சதம்; தென்ஆப்பிரிக்காவை பந்தாடியது பாகிஸ்தார்!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ...
-
SAvsPAK: பாகிஸ்தானை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ...
-
SAvsPAK: ரிஸ்வான் அதிரடியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி நான்கு போ ...
-
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சரமாறியாக சாடும் அஃப்ரிடி!
சொந்த நாட்டு தொடரை விட்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் செல்ல அனுமதி வழங்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் ...
-
பாபர், ஃபகர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 321 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs PAK: டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47