Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Quinton de kock century

ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், டுசென் சதம்; மில்லர் அசத்தல் பினிஷிங் - நியூசிக்கு 358 டார்கெட்!
Image Source: Google

ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், டுசென் சதம்; மில்லர் அசத்தல் பினிஷிங் - நியூசிக்கு 358 டார்கெட்!

By Bharathi Kannan November 01, 2023 • 17:58 PM View: 166

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - குயின்டன் டிக் காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடியா கேப்டன் டெம்பா பவுமா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டி காக் - ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர். 

Related Cricket News on Quinton de kock century