Rcb vs lsg
ஐபிஎல் 2023: இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றத்தையே அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணியில் விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து லக்னோ அணி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து த்ரில் வெற்றியை பதிவு செய்தது. லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 62 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 65 ரன்களும் சேர்த்து அசத்தினர். கேஎல் ராகுல் 20 பந்துகளில் 18 ரன்கள் விளாசியும் லக்னோ அணி அபார வெற்றியை பதிவு செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார்.
Related Cricket News on Rcb vs lsg
-
ஐபிஎல் 2023: ஃபாஃப் டூ பிளெசிஸுக்கு அபராதம்; ஆவேஷ் கானுக்கு தண்டனை!
ஆவேஷ் கான், கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து ஹெல்மெட்டை ஆக்ரோஷமாக தூக்கி எறிந்தது அவருக்கே ஆபத்தாக முடிந்திருக்கிறது. தகாத முறையில் வெற்றியை கொண்டாடியதாக உரிய நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது. ...
-
எனக்கு சற்று நேரம் சரியில்லாதது போல இருக்கிறது - கேஎல் ராகுல்!
நிக்கோலஸ் பூரன் மற்றும் ஸ்டோய்னிஷ் இருவரும் மிடில் ஓவர்களில் அடித்துக் கொடுத்த விதம் தான் எங்களுக்கு இத்தகைய வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறது என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது எல்எஸ்ஜி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மைதானத்திற்கு வெளியே சென்ற பந்து; டூ பிளெசிஸ் மிரட்டல்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 115 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் அரைசதம்; கடின இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47