Advertisement
Advertisement

Shaheen afridi

ஐஎல்டி20 2024:  கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
Image Source: Google

ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!

By Bharathi Kannan January 25, 2024 • 11:04 AM View: 147

இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஜேமி ஸ்மித்தும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கிறிஸ் லின் - ஜோர்டன் காக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Related Cricket News on Shaheen afridi