Shakera selman
ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இன்று ஒரு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால் ஒரே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 4 வீராங்கனைகள் தங்கள் ஓய்வை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி அனிஷா முகமது, ஷகேரா செல்மான் மற்றும் சகோதரிகளான கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் என நான்கு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீராங்கனைகள் ஒரேநாளில் ஓய்வு முடிவை அறிவித்து விட்டார்கள்.
இதில் அனிஷா முகமது மற்றும் ஷகேரா செல்மான் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டிஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மூத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீராங்கனைகள் ஆவார்கள். அனிஷா முகமது 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இதில் 141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 117 டி20 போட்டிகளில் விளையாடி, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 180 விக்கெட்டுகள், டி20 கிரிக்கெட்டில் 125 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
Related Cricket News on Shakera selman
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47