Advertisement
Advertisement
Advertisement

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியைச் சேர்ந்த அனிஷா முகமது, ஷகேரா செல்மான், கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளனர்.

Advertisement
ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 19, 2024 • 12:46 PM

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இன்று ஒரு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால் ஒரே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 4 வீராங்கனைகள் தங்கள் ஓய்வை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி அனிஷா முகமது, ஷகேரா செல்மான் மற்றும் சகோதரிகளான கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் என நான்கு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீராங்கனைகள் ஒரேநாளில் ஓய்வு முடிவை அறிவித்து விட்டார்கள்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 19, 2024 • 12:46 PM

இதில் அனிஷா முகமது மற்றும் ஷகேரா செல்மான் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டிஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மூத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீராங்கனைகள் ஆவார்கள். அனிஷா முகமது 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இதில் 141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 117 டி20 போட்டிகளில் விளையாடி, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 180 விக்கெட்டுகள், டி20 கிரிக்கெட்டில் 125 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 

Trending

அதேபோல், ஷகேரா செல்மான் சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நீடித்திருக்கிறது. இவர் நூறு ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டி20 போட்டிகள் விளையாடியிருக்கிறார். இரண்டு வடிவங்களிலும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் சகோதரிகளான கிசியா நைட் மற்றும் கிஷோனா நைட் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்தவர்களில் இருக்கிறார்கள். இதில் கிசியா 87 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடி 2000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்திருக்கிறார்.

இவரது சகோதரி கிஷோனா நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக விளையாடி மொத்தமாக 1397 ரன்கள் அடித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தங்களது சர்வதேச வீராங்கனைகள் நான்கு பேர் ஓய்வு பெற்றதை ஒரே நேரத்தில் வெளியிட்டு இருப்பது கொஞ்சம் சுவாரசியமான் ஒன்றாக அமைந்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement