Shashank singh
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறி தடுமாறிய நிலையில் நிதீஷ் ரெட்டியின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதேசமயம் அதிரடியாக விளையாடி சாம் கரன், சிக்கந்தர் ரஸா ஆகியோரும் போதிய ரன்களைச் சேர்க்க தவறினர். இருப்பினும் இறுதிவரை போராடிய ஷஷாங்க் சிங் 46 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 33 ரன்களை சேர்த்த போது, அந்த அணியால் 20 ஓவர்களில் 180 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. மேலும் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நிதீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on Shashank singh
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது - அஷுதோஷ் சர்மா!
சஞ்சய் பங்காரின் அறிவுரை ரஞ்சி கோப்பை தொடரில் எனக்கு உதவியது. அதன் காரணமாக நான் எனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினேன் என்று அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
எனது கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஷஷாங்க் சிங்!
பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் எனது ஷாட்டை தேர்வு செய்து விளையாடினே என குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இளம் வீரர்களின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஷிகர் தவான்!
ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதே திட்டமாக இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டமிழந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஃபர்குசன் ஓவரை பந்தாடிய ஷஷாங் சிங் - வைரல் காணோளி!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வீரரின் அதிரடி பேட்டிங் ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றி அமைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47