Sl vs aus head to head
இலங்கை vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs Australia 2nd ODI Dream11 Prediction: ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை (பிப்ரவரி 14) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக அதற்கான பதிலடியை இந்த போட்டியில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், முதல் போட்டியை வென்றுள்ள இலங்கை அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs aus head to head
-
இலங்கை vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (பிப்ரவரி 12) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47