Sreesanth calmest all time xi
தனது 'CALMEST' லெவனை தேர்வு செய்த ஸ்ரீசாந்த்; கம்பீர், கோலிக்கு இடம்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ் ஸ்ரீசாந்த். இந்திய அணி கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இவரது பந்துவீச்சும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. மேற்கொண்டு இந்திய அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதன்படி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சோர்த்து ஸ்ரீசாந்த் 169 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்களுக்காக விளையாடியுள்ள இவர் 44 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் சூதாட்ட சர்ச்சையால் கிரிக்கெட் விளையாட தடையை சந்தித்த அவர், அதன்பின் குற்றவாளி இல்லை என்ற தீர்ப்புக்கு பிறகு மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Sreesanth calmest all time xi
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47