Ss vs mp: Cricket News & Match Updates
TNPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய முருகன் அஸ்வின்; ஸ்பார்டன்ஸை பந்தாடியது பாந்தர்ஸ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்பார்டன்ஸ் அணிக்கு அபிஷேக் மற்றும் கவின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபிஷேக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராபின் பிஸ்ட் வந்த வேகத்திலேயே 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கவினுடன் இணைந்த விஷால் வைத்யாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கவின் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இந்த இணை மூன்றாவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த கவின் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 70 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Ss vs mp - Tesst
TNPL 2024: கவின்; வைத்யா அரைசதம்; மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
டிஎன்பில் 2023: சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி!
டிஎன்பிஎல் 2023: சேலம் ஸ்பார்ட்டன்ஸை 98 ரன்களில் சுருட்டியது மதுரை பந்தர்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47