Thomas kaber
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய கேப்டவுன் அணிக்கு செதிகுல்லா அடல் மற்றும் கானர் எஸ்டெர்ஹுய்சென் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்திருந்த செதிகுல்லா அடல் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Thomas kaber
-
எஸ்ஏ20 2024: ரியான் ரிக்கெல்டன்அதிரடியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை 172 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24