Vishnu solanki
துயரிலும் தளராமல் அணிக்கு உதவும் விஷ்ணு சோலாங்கி!
29 வயது சோலாங்கி, இதுவரை 25 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 6 சதங்களுடன் 1679 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2020-21 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் ஹரியாணாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து (6,4,6) பரோடா அணிக்குப் பரபரப்பான முறையில் வெற்றியை அளித்தார். 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார்.
கடந்த பிப்ரவரி 11 அன்று கட்டாக்கில் பரோடா அணியினருடன் கரோனா தடுப்பு விளையத்தில் சோலாங்கி இருந்தபோது அவருடைய மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்த தகவல் கிடைத்தது. ஆனால் பிப்ரவரி 12 அன்று நள்ளிரவில், முந்தைய நாள் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக ஊருக்கு விரைந்தார் சோலாங்கி. இதனால் பெங்கால் அணிக்கு எதிரான பரோடா அணியின் முதல் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
Related Cricket News on Vishnu solanki
-
ரஞ்சி கோப்பை 2022: சோகத்தை மூட்டை கட்டி வைத்து சதம் விளாசிய சோலாங்கி!
விஷ்ணு சோலாங்கியின் மகள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இருப்பினும், அந்த சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு, உடனே ரஞ்சி அணிக்கு திரும்பி, எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் விளையாடி சதம் அடித்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47