Wi vs aus
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராஃப்ட் உப்புத்தாள் கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயன்றது அங்கிருந்த கேமராவின் மூலம் அம்பலமானது. பந்து ‘ஸ்விங்’ ஆவதற்கு வசதியாக அவர் இவ்வாறு செய்ததும், இந்த திட்டத்தின் பின்னணியில் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருந்ததும், அதனை கேப்டன் ஸ்டீவன் சுமித் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராப்டுக்கு 9 மாதமும், ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதித்தது.
இந்த விவகாரத்தில் பான்கிராப்ட் 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய புயலை கிளப்பி உள்ளார். தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பந்தை நான் தேய்த்தது பவுலர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்கான தான். எனவே இந்த விஷயம் அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுக்கு தெரிந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த பவுலருக்கு தெரியும் என்று சொல்லவில்லை.
Related Cricket News on Wi vs aus
-
ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
கெய்ல், ரஸ்ஸல், ஹெட்மையர் அடங்கிய 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs AUS: 23 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் 23 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பந்தை சேதப்படுத்திய வழக்கு; புதிய சர்ச்சையை கிளப்பிய பான்கிராஃப்ட்!
பந்தை சேதப்படுத்தியது அணியின் பவுலர்களுக்கு தெரியும் என ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
-
இந்திய அணி மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்த டிம் பெயின்!
இந்திய அணி குறித்து தன்னுடைய குற்றச்சாட்டிற்கு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47