Wtc points table india
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனை!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் பேட்டிங்கில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இதன்மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 122 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து சத்தியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
Related Cricket News on Wtc points table india
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரேஸிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்; இந்திய அணிக்கு வாய்ப்பு!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேஸிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிய நிலையில், இந்திய அணிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47