IND vs ENG, 1st ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ரூட், மஹ்மூதிற்கு இடம்!

Updated: Wed, Feb 05 2025 20:16 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. 

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (பிப்ரவரி 6)முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோ ரூட் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோரும் தங்கள் இடங்களை உறுதிசெய்துள்ளனர். மேற்கொண்டு இந்த அணியில் ஆதில் ரஷித் மட்டுமே  முதன்மை சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், பில் சால்ட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை