இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 110 ரன்களை எட்டிய நிலையில் பிரதிக 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனாவும் 13 பவுண்டரிகளுடன் 91 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் - ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஹர்லீன் தியோல் 44 ரன்னிலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 34 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் ஜெமிமா 31 ரன்களையும், ரிச்சா கோஷ் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் ஸைதா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ஹெய்லீ மேத்யூஸ், கியானா ஜோசப் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், ரஷாதா வில்லியம்ஸ் 3 ரன்னிலும், டியாண்டிரா டோட்டின் 8 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 11 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ஷெமைன் காம்பெல் - ஆலிய அலீன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து சிறிது நேரத்திற்கு விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

இதில் ஷெமைன் காம்பெல் 21 ரன்னிலும், ஆலியா 13 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் அஃபி ஃபிளெட்சர் 24 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய்து. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News